பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் எது தெரியுமா?.. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாதாம்! Pongal 2025 Perfect Time To Celebrate

பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் எது தெரியுமா?.. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாதாம்!

Pongal 2025 Perfect Time To Celebrate

Pongal 2025 Perfect Time To Celebrate :பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு ‘பொங்கி வழிதல், பொங்குதல்’ என்பது பொருள்.
அதாவது புதிய பானையில், புத்தரிசி இட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

Pongal 2025 Perfect Time To Celebrate

2024-ம் ஆண்டில் ஜனவரி 13-ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 16-ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

1. ஜனவரி 13-ஆம் தேதி போகிப் பொங்கல்

Whatsapp Chennal   Join

2. ஜனவரி 14-ஆம் தேதி சூரிய பொங்கல்

3. ஜனவரி 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல்

4. ஜனவரி 16-ஆம் தேதி காணும் பொங்கல்

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

ஜனவரி 14-ஆம் தேதி (தை மாதம் 01-ஆம் தேதி)

பொங்கல் வைக்க நல்ல நேரம்

காலை 07.30 முதல் 08.30 வரை,

காலை 10.30 முதல் 11.30 வரையிலும், பொங்கல் வைக்கலாம்.

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டாம்.

அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கலுக்கான முன்னேற்பட்டுகளை தவிர்க்க வேண்டும்.

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

காலை 9.30 முதல் மதியம் 10.30 மணி வரை ஆகும். அதைப்போலவே, மாலை 4:30 முதல் 5 30 மணி வரை மாட்டுப்பொங்கல் வைக்கலாம்.

தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரிய பகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தைப்பொங்கல் மிக முக்கியமான நாள்.

கிராமப்புறங்களில் மக்கள் இந்த தைப்பொங்கலைத் திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலைச் செய்வார்கள்.

அந்தப் பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்.

Leave a Comment

error: Content is protected !!