தமிழக பொங்கல் பரிசு தொகை ரூ.2000..?- வெளியான சூப்பர் குட் நியூஸ்!..
Pongal Parisu Thogai 2025
Pongal Parisu Thogai 2025: தமிழக அரசு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் இந்த தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகையானது தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசானது ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ரூபாய் ஆயிரம் ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்நிலையில் பொங்கல் மாதத்தில் 2000 ரூபாயாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெற தமிழக அரசு சூப்பர் திட்டத்தை வகுத்துள்ளது அதைப் பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.
தமிழக பொங்கல் பரிசு தொகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக மக்கள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் மேலும் மக்கள் இந்த பொங்கல் திருநாளை எந்தவித வறுமையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதின் நோக்கத்தின் காரணமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது பழக்கமாக உள்ளது. இந்த திட்டம் முன்பு அரசு ஊழியர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்போது இந்த திட்டமானது திருத்தப்பட்டு அரசு ஊழியர்களுக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Whatsapp Chennal | Join |
Tamil Nadu Pongal prize money Rs.2000..?- Super good news released!..
மேலும் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு மாதமாதம் 15ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கியை கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது அவ்வாறு வரவு வைக்கப்படும் இந்த தொகை ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கும்போதே இந்த தொகையும் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதாவது மொத்த தொகையாக ரூபாய் 2000 உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.