மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!- நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!..
Tomorrow Local Holiday Tamilnadu Dec 24
Tomorrow Local Holiday Tamilnadu Dec 24: கிறிஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிழக்குகள் வெட்டி ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி வெகு கோலாகலமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் முக்கிய நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
உள்ளூர் விடுமுறை
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இருக்கின்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முதல் நாளான டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்
எனவே அம்மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.
