தமிழக ஆளுநரை சந்தித்தார் த.வெ.க. தலைவர் விஜய் காரணம் என்ன?-முழுச்செய்தி Governor RN Ravi And Vijay Meeting Dec 30

தமிழக ஆளுநரை சந்தித்தார் த.வெ.க. தலைவர் விஜய் காரணம் என்ன?-முழுச்செய்தி

Governor RN Ravi And Vijay Meeting Dec 30

Governor RN Ravi And Vijay Meeting Dec 30: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Governor RN Ravi And Vijay Meeting Dec 30

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்க கூடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

Whatsapp Chennal   Join

இந்த சந்திப்பின் போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவு பரிசாக நடிகர் விஜய் வழங்கினார். பதிலுக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பை நினைவு பரிசாக ஆளுநர் வழங்கி உள்ளார்.

தமிழக அரசின் ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது நினைவு பரிசாக புத்தகங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் பெஞ்சல் புயல் நிவாரணம் குறித்து ஆளுநரிடம் விஜய் மனு அளித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!