பொங்கல் பரிசுத்தொகுப்பு 2025 டோக்கன் விநியோகம் செய்யப்படும் தேதி தமிழக அரசு அறிவிப்பு!..
Pongal Parisu 2025 Token Date Jan 3
Pongal Parisu 2025 Token Date Jan 3: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 நாட்களுக்கு முன்பாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்க தொகையை தமிழக அரசு வழங்குவது உண்டு.
ஆனால் 2025 ஆம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Whatsapp Chennal | Join |
பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் நாள்
அந்த வகையில் தற்போது பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் நாள் ஆனது தமிழக அரசு அறிவித்துள்ளது அதாவது 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தினசரி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை பெரும் வகையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் வீடு வீடாக பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.