தமிழகத்தில் நாளை(01/01/2025) மின்தடையா?- வெளியான முக்கிய தகவல்
Power Cut Areas January 1
Power Cut Areas January 1: தமிழக அரசின் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

இது குறித்து முன்கூட்டியே தமிழக அரசின் மின்வாரியத்தின் இணையதளம் மற்றும் நாளிதழ் வாயிலாகவும் அறிவிப்பு செய்யப்படும்.
இந்த நிலையில் நாளை ஜனவரி 01 தமிழகத்தில் புத்தாண்டு பொது விடுமுறை தினம் என்பதால் மின்தடை குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
அதனால் வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போதைய தகவலின் படி நாளை மறுநாள்(02/01/2025) திருப்பூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன் காரணமாக அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மின்விநியோகமானது தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
