தமிழகத்தில் பொங்கலுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை!- மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்! TN Pongal Continue Leave 2025 

தமிழகத்தில் பொங்கலுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை!- மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்!

TN Pongal Continue Leave 2025 

TN Pongal Continue Leave 2025: தமிழகத்தில் பொங்கல் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஜனவரி 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள அதனைப் பற்றிய முழு விவரத்தை கீழ்கண்ட தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Pongal Continue Leave 2025 

Whatsapp Chennal   Join

பொங்கல் பண்டிகை:

ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. அந்த நல்ல நாளில் மக்கள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்து வேண்டி கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு  வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு 14ம் தேதி  முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடுத்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.

எனவே இந்த விழாவையொட்டி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  13-ந் தேதியும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டது. எனவே ஏற்கனவே  12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முதல் 19-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். 

Leave a Comment

error: Content is protected !!