300 யூனிட் இலவசம் மின்சாரம் வெறும் ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும் வெளியான வாக்குறுதிகள்!- பொதுமக்கள் மகிழ்ச்சி!
Congress Election Promise 2025
Congress Election Promise 2025: தமிழகமானது அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது தமிழக அரசு அளித்து வரும் வாக்குறுதிகள் தற்போது இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் அதில் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தின் முன்னோடி திட்டங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
வருகிற சட்டசபை தேர்தலில் இந்த புதிய அறிவிப்புகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் இப்போது முழுமையாக விரிவாக பார்க்க உள்ளோம்.
Whatsapp Chennal | Join |
தேர்தல் என்றாலே பொதுமக்களுக்கு வாக்குறுதிகளை வழங்க அரசியல் கட்சிகள் அதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி தேர்தல் பிரச்சாரத்துக்காகவே தனியாக குழுக்களை அமைத்து புதிய வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது நடைபெறக்கூடிய டெல்லி சட்டசபை தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் பல்வேறு அரசியல் கட்சிகள் அழித்து வருகின்றன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது இதனால் தேர்தல் வாக்குறுதியானது இந்த மூன்று கட்சிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
வாக்குறுதிகள்
தற்போது இந்த தேர்தல் வாக்குறுதியில் அனைத்து விதமான பொது மக்களையும் கவரும் வகையில் தேர்தலின் முக்கிய அம்சமாக இந்த வாக்குறுதியானது காங்கிரஸ் கட்சியின் பிரம்மாஸ்திரமாக இந்த வாக்குறுதி இருக்கும் என அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுமக்களுக்கு 300 யூனிட் இலவசம் மின்சாரமும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 500க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்கனவே காங்கிரஸ் கட்சியானது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.
காங்கிரஸ் ஆனது டெல்லியில் ஆட்சியைப் பிடித்தால் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 2500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 8,500 வழங்கப்படும் என்றும் மருத்துவ காப்பீட்டுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய காப்பீடு வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் ஆனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த டெல்லி சட்டசபை தேர்தல் ஆனது வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் ஆனது நடக்க உள்ளது இன்னும் உள்ள 20 நாட்களில் மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்து புதிய வாக்குறுதிகள் பிரச்சாரத்தில் தலைவர்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.