கலைஞர் கைவினை திட்டம்- 3 லட்சம் வரை கடனுதவி விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
Kalaignar Craft Scheme Apply Full Details
கலைஞர் கைவினை திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் சீரிய நோக்கத்துடன் தமிழக முதல்வரால் கடந்த 11 12 2024 அன்று கலைஞர் கைவினை திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Whatsapp Chennal | Join |
இத்திட்டத்தின் வாயிலாக கடன் பெற விரும்புவோர் 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ரூபாய் 3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி பெறலாம் இதில் அதிகபட்ச மானிய தொகை ரூபாய் 50,000 ஆகும் பின் மானியமாக 5% வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகு கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலான பொருட்கள் செய்வோர் நெசவு தொழில் செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர், கட்டிடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோக பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர் உள்ளிட்ட அரசால் நிர்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில்ஈடுப்பட்டவகள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து கடன் பெற்று பயன் பெறலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், நல வாரிய அட்டை பான்கார்டு, விலைப்புள்ளி சாதிசான்றிதழ், தகுந்த முன் அனுபவச்சான்று (5 ஆண்டுகள்) மற்றும் புகைப்படம் ஆகும். இத்திட்டத்தில் பதிவு செய்ய msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து 2 விண்ணப்ப நகல்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை (நான்காம் தளம்), அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.