தமிழக அரசின் இலவச வீடு 3.5 இலட்சம் பெற யார் விண்ணப்பிக்கலாம்?.. முழு விவரம்
Kalaignar Kanavu Illam Scheme Details Tamil
Kalaignar Kanavu Illam Scheme Details Tamil Dec 22: தமிழக அரசானது மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருவர் இருக்கும் இருப்பிடத்தை சொந்தமாக வைத்துக் கொள்ள அவர்களுக்கு வீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. அந்த வீடு ஏழை எளிய மக்கள் இன்று இருக்கும் சூழ்நிலையில் புதிதாக கட்டுவது என்பது மிகவும் சிரமப்பட்டு செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது அல்லது அவர்களுக்கு அது சொந்த வீடு என்பது கனவாகவே உள்ளது.
இந்த கனவை நிறைவேற்றவே தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டம் தான் கலைஞரின் கனவு இல்ல திட்டம் இத்திட்ட மூலம் தமிழகத்தில் குடிசை வீடுகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தமிழக அரசின் முக்கிய கடமையாகும்.
Whatsapp Chennal | Join |
இதை நோக்கி தமிழக அரசு செயல் பட்டு வருகிறது வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்குவது தமிழகத்தின் நோக்கமாகும் அதை நோக்கி செயல்படும். தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு லட்சம் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் நிறைவேற்ற உள்ளது.
கலைஞரின் கனவு இல்ல திட்டம் யார் யார் விண்ணப்பிக்கலாம்?
- இந்த கலைஞரின் கனவு இல்ல திட்டமானது வீடு இல்லாத ஏழை எளியோர் கட்டாயம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்திற்கு முதலில் முன்னுரிமை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு தமிழக அரசானது வழங்க உள்ளது இதற்காக தமிழக அரசு 202425-ஆம் ஆண்டில் மொத்தம் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டுப்பட்டுள்ளது ஒவ்வொரு வீட்டுக்கும் 3.5லட்சம் என்ற அடிப்படையில் மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- 8 லட்சம் வீடுகள் இலக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகளை கட்டித்தர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
- சொந்த வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு தரமான புதிய வீடுகளை கட்டுவதற்கு, சுமார் 3,500 கோடி ரூபாய்யை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் 3,50,000 ரூபாய் என்ற அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 100,000 புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சுமார் 8,00,000 குடிசை வீடுகள் இருப்பதை அரசு கண்டறிந்தது. இதனையடுத்து அடுத்த 6 ஆண்டுகளில் 8,00,000 புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. 2030க்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த ஆண்டு 100,000 வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு புதிய வீடும் சமையலறை மற்றும் ஒரு சிறிய வாழ்க்கை அறை உட்பட 360 சதுர அடி அளவில் இருக்கும்.
Who can apply to get free house 3.5 lakh from Tamil Nadu government?
மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டும்போது பணத்தைச் சேமிக்க உதவுவதற்காக, TANCEM சார்பில் அவர்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் கம்பிகள் வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கான பணம் மக்களின் வங்கி கணக்கிற்கு நான்கு தவணைகளாக வழங்கப்படுகிறது. வீடு கட்ட தொடங்கும் போது கொஞ்சம் பணம், பின்னர் ஜன்னல்களை வைக்கும்போது கொஞ்சம் பணம், பின்னர் கூரை அமைக்கும் போது கொஞ்சம் பணம் மற்றும் வீடு கட்டி முடிந்ததும் கடைசி தொகை வழங்கப்படுகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு 1,051.34 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. வீடுகள் எவ்வளவு தூரம் கட்டப்பட்டு வருகின்றன என்பதன் அடிப்படையில், பயனாளிகளுக்கு ஏற்கனவே 860.31 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு தேவையான சிமென்ட் மற்றும் இரும்புக்காக 135.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை கலைஞர் கனவு மாளிகை திட்டத்திற்கு 995.61 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஏழை எளிய மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 100,000 வீடுகள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால் வீடுகளை விரைவாக கட்ட தமிழக அரசு கூடுதலாக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மொத்தம், 1451.34 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் எவ்வளவு தூரம் உள்ளது என்ற அடிப்படையில், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளையும் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Dream house 🏠