மகளிர் உரிமைத் தொகை மீண்டும் விரிவாக்கம்!- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்..
Kalaingar Magalir Urimai Thogai Good News Jan 10
Kalaingar Magalir Urimai Thogai Good News Jan 10: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் சட்டப்பேரவையில் பேசும்போது இன்னும் மூன்று மாதங்களில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தகுதிகளின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படும் என கூறியுள்ளார். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Whatsapp Chennal | Join |
அதனால், ஏற்கனவே இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி? எங்கு சென்று கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணபிப்பது? என்ற கேள்வி இருந்தால் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அப்போது உங்களிடம் அரிசி ரேஷன் அட்டை, ஆதார் கார்டு ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மேலும், குடும்ப வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். அரசு இ-சேவை மையங்களுக்கு சென்றாலே இந்த திட்டத்துக்கு தேவையான விண்ணப்ப நடைமுறைகள் தெளிவாக சொல்லிவிடுவார்கள்.
அதன்படி நீங்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு உங்களின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை நடைபெறும். கள ஆய்வு நடத்தப்படும்.
அதில் உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.
ஒருவேளை எந்த தகவலும் வரவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு சென்று விணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதா? அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ளலாம்.
இன்னும் மூன்று மாதங்களில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி என்ற இடத்தில் பெண்கள் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. கணவர் புகைப்படம், பெயர் இருந்தாலும் கூட பெண்கள் குடும்ப தலைவியாக கருதப்பட்டு இந்த திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள்.
அதனால், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பெண்கள் விண்ணப்பிக்கவும்.
அப்போது, வங்கி கணக்கு எண், மொபைல் எண் எல்லாம் சரியாக கொடுத்துள்ளீர்களா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்.