இனி ரேஷன் பொருட்கள் App மூலமும் வழங்கப்படும்.. இந்த App வேண்டும்!..
MERA Ration App 2.0 Introduced
MERA Ration App 2.0 Introduced : நாடு முழுவதும் ரேஷன் பொருட்களை வழங்க மத்திய அரசானது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மக்கள் இனி தங்களுடைய ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டை அல்லது ஸ்மார்ட் கார்ட் மூலம் மட்டுமே பெற்று இருந்த ரேஷன் பொருட்களை இனி ஆப் மூலமாகவும் பெறலாம் அதைப்பற்றி நாம் முழுமையாக பார்க்க இருக்கிறோம்.
ரேஷன் பொருட்களை வழங்குவது என்பது மத்திய மாநில அரசுகளின் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் உணவுப் பொருட்களை குறைந்த விலையில் விநியோகம் செய்யக்கூடிய திட்டமாகும்.
Whatsapp Chennal | Join |
இதன் மூலம் மத்திய அரசு ஆனது நாடு முழுவதும் உணவு தானியங்களை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி வருகிறது அதே போல மாநில அரசும் உணவுப் பொருட்களை மானியத்துடன் வழங்கி வருகிறது தமிழகத்தை பொறுத்தவரை விலை இல்லா அரிசி ஆனது வழங்கப்படுகிறது. மற்ற ரேஷன் பொருட்களான சர்க்கரை கோதுமை பாமாயில் துவரம் பருப்பு மேலும் பல்வேறு உணவுப்பொருட்கள் குறைந்த விலையில் நியாய விலை கடைகள் மூலம் வினியோகம் செய்து வருகின்றது.
எந்த பொருட்களை பொதுமக்கள் பெற அவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டை மூலம் எந்த பொருட்களை தங்கள் குடும்பத்திற்கு வாங்கிக் கொள்ளலாம் இதற்கு இதுவரை ரேஷன் கார்டு கட்டாயம என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மாறுபடும் அவர்களின் மேம்பாட்டு திட்டம் மூலம் ரேஷன் கார்டுகள் ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு பல மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் இந்த ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களுடைய கைவிரல் ரேகை அல்லது கருவிழி படலம் மூலம் உறுதி செய்து உணவு பொருட்களை குறைந்த விலையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அளவில் வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்த நிலை தற்போது மாறப்போகிறது.
மத்திய அரசின் MERA Ration App 2.0 என்ற செயலியை பொதுமக்கள் தங்களுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அந்த செயலியை பயன்படுத்தி இனி ரேஷன் பொருட்களை பெற்று செல்லலாம்.
MERA Ration App 2.0 செயலியை பயன்படுத்துவது எப்படி?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து MERA Ration App 2.0 என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதன் பிறகு தங்களுடைய ஆதார் எண்ணை அந்த செயலில் உள்ளீடு செய்ய வேண்டும்.
பிறகு ஆதார் எண் பதியப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி குறுந்தகவலாக அந்த செல்போன் எண்ணுக்கு வந்தபின் அந்த ஓ டி பி யை MERA Ration App 2.0 செயலியில் உள்ளீடு செய்து உங்களுடைய ரேஷன் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை அந்த செயலில் நீங்கள் பார்க்கலாம்.
இந்த டிஜிட்டல் ரேஷன் கார்டை காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் முடியும். இது மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வாங்குவோர் இந்த செயலி மூலம் எளிதாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
எனவே ரேஷன் கடைக்கு இனி உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு கொண்டு செல்லும்போது தொலைந்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை அல்லது தொலைந்த ரேஷன் அட்டைகள் இல்லாமலும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற இந்த MERA Ration App 2.0 செயலி உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.