மாதம் ரூ.9000 வரை வருமானம் பெறும் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?..- முழு தகவல்கள்!
POMIS Scheme Full Details 2024
POMIS Scheme Full Details 2024: போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் என்றாலே அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் என்பதால் மக்கள் அதில் பாதுகாப்பையும், உறுதியான லாபத்தையும் எதிர்பார்க்கலாம்.
நீங்கள் ஓய்வு காலத்திற்குப்பிறகு வருமானம் பெறுவது குறித்து கவலை இருப்பின் நீங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களை தேர்வு செய்யலாம். அதில் குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் மாதம் ரூ.9000 வரை உங்களால் ஒய்வூதியம் பெற முடியும். அதைப் பற்றி இங்குக் காணலாம்.
Whatsapp Chennal | Join |
நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய நினைத்தால் ரூ.9 லட்சம் Post Office Monthly Income Scheme திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அல்லது நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் தொடங்கினால், அதே தொகையை மாதந்தோறும் பெற மொத்தம் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
போஸ்ட் ஆபீஸ் இத்திட்டத்திற்கு தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. மேலே சொன்ன இரு வழிகளில் எதேனும் ஒன்றில் முதலீடு செய்தால் மாதம் உங்கள் ஒய்வூதியமாக ரூ.9,250 பே அவுட் அதாவது வருமானம் கிடைக்கும்.
தபால் அலுவலக எம்ஐஎஸ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். உங்கள் விருப்பத்தைப் பொறுத்து திட்டத்தை 5 முதல் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். மேலும், நீங்கள் பயனாளிகளாக மூன்று நபர்களுடன் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம், மேலும் முதலீடு மூலம் பெறப்படும் பணம் முதலீட்டாளர்களுக்கு சமமாக விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உங்களுக்கு முன்கூட்டிய மூடல் விருப்பமும் இருக்கும். கணக்கு தொடங்கி ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கலாம். இருப்பினும், நீங்கள் ஒரு வருடத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், நீங்கள் டெபாசிட் செய்த தொகையில் 2 சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1 சதவீத விலக்குடன் பணத்தைப் பெறுவீர்கள்.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் உடைய பயன்கள் என்னென்ன!..
- ஒவ்வொரு மாதமும் நாம் உறுதியாக வருமானம் பெறலாம் நிலையான வைப்புத் தொகையாக இருக்கும் மேலும் அதிக வட்டி தரக்கூடிய திட்டம்
- குறைந்தபட்ச ஆரம்ப முதலீட்டில் வெறும் ஆயிரம் ரூபாய் முதல் தொடங்கலாம்.
- லாக்கின் காலமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் கார்பசை மீண்டும் முதலீடு செய்யலாம்
இவ்வாறு பல்வேறு பயன்களை தரக்கூடிய இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுங்கள். மேலும் பயனுள்ள திட்டங்களை தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பின் தொடருங்கள்.