பொன்மகன் சேமிப்பு திட்டம் ரூ. 500 செலுத்தினால் போதும் 5 லட்சம் பெறலாம் முழு விவரங்கள் இதோ!..
Pon Magan Savings Scheme Details 2024
Pon Magan Savings Scheme Details 2024: அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன அதில் நமக்கு தெரியாத பல திட்டங்கள் இருக்கிறது அவற்றில் ஒரு திட்டத்தைப் பற்றி முழுமையாக பார்க்க இருக்கின்றோம். ஆண் குழந்தைகளுக்கு என புதிய திட்டத்தை தமிழக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அந்தத் திட்டத்தின் பெயர் பொன்மகன் பொது வைத்து நிதி திட்டம் ஆகும் அந்தத் திட்டத்தை குறித்து கீழ்க்கண்ட பதிவில் நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்
ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்புத் திட்டம் ஆகும் .இத்திட்டம் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டம் செப்டம்பர் 2015இல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டம் ஆண் குழந்தைகளுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேர முடியும். இந்த பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் முக்கிய அம்சங்களை குறித்து கீழே காணலாம்.
பத்து வயதிற்குட்பட்ட மைனர் சிறு சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் இக்கணக்கை தொடங்கலாம் .குறைந்தபட்ச ஆரம்ப வைப்பு தொகையானது ரூபாய் 500 ஆக உள்ளது. அதிகபட்ச வருடாந்திர வைப்புத் தொகை ரூபாய் 1.5 இலட்சமாக உள்ளது பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதமானது 7.6 சதவீதமாகும் .
இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம்.
செலுத்திய பணம் மற்றும் வட்டி உட்பட முழு தொகையும் ஆண்மகன் மேஜரான உடன் அவருக்கு வழங்கப்படும்.
பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் ஆனது தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு சிறந்த வழியாக மற்றும் அத்துடன் அதிக வட்டி விகிதத்தை தரக்கூடிய ஒரு திட்டமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட முதிர்வு காலம் திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு மூலமாக நமக்கு விருப்பத்திற்கு ஏற்றது போல் மாற்றுகிறது.
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டத் கணக்கை எவ்வாறு திறப்பது அதற்கான படிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் தபால் நிலையத்தை அணுக வேண்டும்
- இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆரம்ப வாய்ப்புத் தொகை ரூபாய் 500
- கணக்கு திறக்கப்பட்டு பிறகு குழந்தைக்கு பாஸ்புக் வழங்கப்படும்.
பொன்மகன் பொது வாய்ப்பு நிதி திட்டம் ஒரு எளிய முறையில் பணத்தை சேமிக்கும் திட்டமாகும்.
தங்கள் மகனின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை திட்டத்தின் மூலமாக பெற்றோர்கள் சேமித்து வைத்துக் கொள்வது மிகவும் எளிது. இத்திட்டத்தில் மாதம் ரூபாய் 1000 ரூபாய் செலுத்தினால் வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால்வட்டி விகிதம் 7.6% அதன் அடிப்படையில் 15 ஆண்டுகள் நீங்கள் இணைந்தால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வுத் தொகை 5,27,446 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
எனவே இத்திட்டத்தின் வாயிலாக உங்கள் மகனின் சேமிப்பு திட்டத்தை துவங்கி வருங்காலத்தில் பண தேவையை பூர்த்தி செய்யலாம்
