பொங்கல் பரிசு: ரொக்க பணம் ரூ.1000 அமைச்சர் கொடுத்த நியூ அப்டேட்!..
Pongal Gift Rs.1000 Minister Explanation
Pongal Gift Rs.1000 Minister Explanation: தமிழக அரசானது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதனால் பொதுமக்களிடையே பொங்கலுக்கு ரொக்க பணம் பணம் எவ்வளவு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதன்படி ரூபாய் ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் அளிக்கப்படலாம் என பொதுமக்கள் காத்திருந்த நிலையில் அமைச்சர் அறிவித்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Whatsapp Chennal | Join |
அதுவும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையே என ஏங்கும் அளவுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார் அதைப்பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
Pongal Gift Minister Explanation
2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொண்டாடும் வகையில் தமிழக அரசனது பொங்கல் பரிசு தொகை வழங்கும் என அறிவித்திருந்தது அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பானது வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதற்கான பொங்கல் பரிசு டோக்கன்கள் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் டோக்கன் வினியோகம் ஆனது தொடங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசு தொகப்புடன் ரூபாய் 2000 ரொக்க பணம் வழங்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார்.
பொதுமக்களோ குறைந்தபட்சம் ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கலுக்காக வழங்கும் ரொக்கப்பணம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுமா என எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள செய்தி யாதெனில், கடந்த ஆண்டு புயல் மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூபாய் 2028 கோடி செலவு செய்து விட்டோம். இந்த நிதியை மாநில பேரிடர் நிதியிலிருந்து செலவு செய்திருக்கிறோம்.
மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 37 ஆயிரம் கோடி கேட்டதற்கு மத்திய அரசு 276 கோடி மட்டுமே தமிழக அரசுக்கு அளித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு நிதிச் சுமை அதிகமாக ஏற்பட்டுள்ளது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவே தமிழக அரசுக்கு 280 கோடி செலவாகி உள்ளது எனவே நல்ல சூழல் விரைவில் உருவாகும் மகளை உரிமை தொகை ரூ.1000 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.