பொங்கல் விடுமுறை கடைசி நேர அப்டேட் -சூப்பர் விடுமுறை அறிவிப்பு! Pongal Leave News 2025 Jan 11

பொங்கல் விடுமுறை கடைசி நேர அப்டேட்- சூப்பர் விடுமுறை அறிவிப்பு!

Pongal Leave News 2025 Jan 11

Pongal Leave News 2025 Jan 11: பொங்கல் பண்டிகை விடுமுறை 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை என்பது தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொண்டாட கூடிய மிகப்பெரிய அறுவடை திருவிழாவாகும் இந்த திருவிழா நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

Pongal Leave News 2025 Jan 11
Pongal Leave News 2025 Jan 11

பொங்கல் 2025

தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் விடுமுறையானது ஜனவரி 14ஆம் தேதி பெரும் பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்துகின்ற நாளாக கொண்டாடப்படுகின்றது அதேபோல ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று உழவர்கள் தங்கள் உழவு நண்பர்கள் ஆன மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது அடுத்த நாள் ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் உறவினர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசி பெறவும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடவும் இந்த காணும் பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விடுமுறை 2025

தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் விடுமுறை ஆனது ஜனவரி மாதம் 14ஆம் தேதி தை முதல் நாள் தொடங்கி ஜனவரி 16ஆம் தேதி தை மூன்றாம் நாள் வரை பொது விடுமுறை ஆகும்.

Whatsapp Chennal   Join

ஜனவரி 18 19 ஆகிய தேதிகள் வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தமிழக அரசன் அது பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்திருந்தது எனவே தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் விடுமுறை ஆனது 6 நாட்கள் தொடர் விடுமுறையாகும்.

ஜனவரி மாதம் 13ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகின்ற இந்த நாள் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் ஆனது வைக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் ஜனவரி 13 ஆம் தேதி விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விடுமுறைகளாக எடுத்துக் கொள்ளலாம் அதில் சம்பள பிடித்தம் செய்யப்படாது என்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனவரி 13ஆம் தேதி அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொங்கல் விடுமுறை ஆக தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது கூடுதல் தகவலாகும்.

2 நாட்கள் கூடுதல் விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது புதுச்சேரியிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையாகும் ஏற்கனவே புதுச்சேரி அரசன் பொங்கல் விடுமுறையாக 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையை அறிவித்திருந்தது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரீட்சைகளை செய்து தற்போது புதுச்சேரி அரசனது ஜனவரி மாதம் 16 மற்றும் ஜனவரி 17 ஆகிய இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி மாதம் ஒன்று மற்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளது.

ஜனவரி 13 போகி பொங்கல் விடுமுறை

ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது எனவே அரசு இதனை பரிசீலனை செய்து விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

Leave a Comment

error: Content is protected !!