பொங்கல் பரிசுத்தொகுப்பு 2025 என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது- அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! Pongal Parisu 2025 Latest Update

பொங்கல் பரிசுத்தொகுப்பு 2025 என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது- அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Pongal Parisu 2025 Latest Update

Pongal Parisu 2025 Latest Update: தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அறுவடை திருவிழாவாகவும் இயற்கைக்கும் உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

Pongal Parisu 2025 Latest Update

பொங்கல் பரிசுத்தொகுப்பு 2025

2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.

Whatsapp Chennal   Join

Pongal Parisu 2025 Latest Update

இதன் மூலம் இரண்டு கோடியே 20 லட்சத்தி 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பயன் பெறுவார்கள் இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

Pongal Parisu 2025 Latest Update

இலவச வேட்டி சேலைகள் தயார்நிலை

Pongal Parisu 2025 Latest Update

மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகையுடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செய்தியாக வெளியிட்டுள்ளது.

Press Release Notification PDF

Leave a Comment

error: Content is protected !!