Pongal Parisu 2025 Today News
பொங்கல் பரிசு ரூபாய் 750 அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு
Pongal Parisu 2025 Today News பொங்கல் பரிசு ரூபாய் 750 அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும்.
பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.750 செலுத்தப்படும்- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.

Pongal Parisu 2025
தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை.
பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை.
தற்போது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகனிடம் கேட்டதற்கு, “இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன்கார்டுக்கு தலா ரூ.750 வீதம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
