பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்க பணம்:- தமிழக அரசு உத்தரவு விட வேண்டும்!
Pongal Parisu Rupees 1000 TN Issued An Order
Pongal Parisu Rupees 1000 TN Issued An Order:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் வறுமையின்றி கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொங்கல் பரிசானது வருடம் வருடம் வழங்கப்பட்டு வருகிறது எனவே அந்த நோக்கத்திற்காக தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஓரிரு தினங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.
Whatsapp Chennal | Join |
மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பொங்கல் பரிசு தொகப்புடன் ரொக்க தொகை வழங்கப்படாது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார் நிதிச் சுமை காரணமாக ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் அறிவிக்கவில்லை என்று தமிழக நிதி அமைச்சர் விளக்கம் கொடுத்தார் .
வலுக்கும் கோரிக்கைகள்
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகப்புடன் ரூபாய் 1000 உதவித்தொகையையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே பெரும் நிதிச் சுமைக்கும் மத்தியிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து ஆயிரம் ரூபாயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே கோரிக்கை தொடர்பாக எக்ஸ்தலத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் களத்தில் ஒரு வேடம் மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா என்றும் மக்களை ஏமாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆமாம் மு க பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் பொங்கல் பரிசு தொகப்பிலும் ரொக்க பணம் வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்குவதோடு அனைத்து மக்களுக்கும் அந்த பணம் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம் ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசு தொகை கூட ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் காலதாமதம் இல்லாமல் மக்களுக்கு பணம் உடனடியாக போய் சேர வேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய் சேராத நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே பொங்கல் பரிசு ரூபாய் 1000 தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பலதரப்பட்ட கோரிக்கைகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.
எனவே மக்கள் மத்தியில் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.