பொங்கல் பரிசு ரொக்கத் தொகை- சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு?
Pongal Parisu Thogai 2025 Jan 6
Pongal Parisu Thogai 2025 Jan 6: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
Whatsapp Chennal | Join |
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நிதி நெருக்கடி, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்காததற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது தொடர்பாக நிதித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதுமட்டுமின்றி வேறு ஏதேனும் ஒரு திட்ட செலவை குறைத்து பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்குவது தமிழக அரசு பரிசீலனையில் உள்ளதாகவும், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.