பொங்கலுக்கு ஒரு நாள் முன்பும் விடுமுறை!..பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி!..
Pongal School Leave Update 2025
Pongal School Leave Update 2025: பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்பும் விடுமுறையை அறிவித்துள்ளது. தமிழக அரசு அந்த உள்ளூர் விடுமுறை எந்த மாவட்டத்திற்கு என்று நாம் இப்போது பார்க்கலாம்.

ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி- 25ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலுக்கு பள்ளி மாணவருக்கு விடுமுறை மிக அதிகமாக வருகின்ற சூழ்நிலையில் பொங்கலுக்கு ஒரு நாள் முன்பாகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். பொதுவாக பள்ளிப் பருவங்களை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே குஷி தான் அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம் மாணவர்கள் அவ்வளவு சந்தோஷத்தில் இருப்பார்கள்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை வட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்கள நாத சுவாமி திருக்கோவிலில் இந்த ஆருத்ரா தரிசன விழாவானது வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இதனை ஒட்டி அந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆனது உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
