மின்சாரத்துறை நிறுவனத்தில் 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு!..
REC Limited Recruitment 2024
REC Limited Recruitment 2024 : மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் இந்தியா (REC limited)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:
பல்வேறு பிரிவுகளில் இருக்கும் மேனேஜர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
Whatsapp Chennal | Join |
பொறியியல் பிரிவு, ஆர்டிஎஸ், நிதி மற்றும் கணக்கு, எச்ஆர், ஐடி, தீயணைப்பு, சிஎஸ், சிசி, சட்டம், டிஎஸ்ஆர், செயலகம், ராஜ்பாஷா உள்ளிட்ட பிரிவுகளில் டெபியூட்டி ஜெனரல் மேனேஜர், ஜென்ரல் மேனேஜர், சீப் மேனேஜர், மேனேஜர், உதவி மேனேஜர், அதிகாரி, மேஜேனர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 74 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- அந்தந்த பிரிவிற்கு ஏற்ப பாடப்பிரிவில் இளங்கலை/ முதுகலை, எம்பிஏ, சிஏ உள்ளிட்டவை பெற்றிருக்க வேண்டும். மேலும், பதவிக்கு ஏற்ப பணி அனுபவம் தேவை. அதிகாரிகள் பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
வயது வரம்பு:
மத்திய அரசின் ஆர்இசி நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 52 வயது வரையும், டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 48 வயது வரையும், தலைமை மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 45 வயது வரையும், டிபெயூட்டி மேனேஜர் பதவிக்கு 39 வரையும், உதவி மேனேஜர் பதவிக்கு 35 வரையும் இருக்கலாம். அதிகாரி பதவிக்கு அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம்.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
ஊதியம்:
இப்பணியிடங்களுக்கு பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி, கொடுப்பனைகளும் இப்பதவிகளுக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதார்களில் தகுதிக்கு ஏற்று தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் அல்லது இதர தேர்வு முறை குறித்து தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recindia.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம். தகுதியானவர்கள் தங்களின் விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Apply Last Date: 31.12.2024 மாலை 6 மணி வரை
More Info- Click Here