Scholarship Credited 2024-25 Year
2024 – 25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வந்தாச்சு
மத்திய மாநில அரசுகள் ஆனது உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்த Renewal Application விண்ணப்பித்தவர்களுக்கு கல்வி உதவி தொகையானது மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது அதைப்பற்றி முழு விபரத்தை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

The scholarship amount for the year 2024-25 has arrived
மத்திய மாநில அரசுகள் ஆனது உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு பெயர்களில் கல்வி உதவித் தொகையானது வழங்கி வருகிறது தமிழகத்தை பொறுத்தவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலமாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாகவும் சமூக நலத்துறை மூலமாகவும் கல்வி உதவித் தொகையானது வழங்கி வருகிறது.
மத்திய அரசானது தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
Whatsapp Chennal | Join |
ஆதிதிராவிட நலத்துறை உதவித்தொகை 2024 -25
ஆதி திராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் மதத்திலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உதவித்தொகைக்கு இந்தாண்டு புதுப்பித்தல் மூலம் விண்ணப்பித்த மாணவ மாணவிகளின் வங்கி கணக்கில் கல்வி உதவி ஆனது வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உதவித்தொகைகள் ஆனது மத்திய அரசின் பங்காக 60% மாநில அரசின் பங்காக 40% உதவித்தொகையானது தனித்தனியே மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது அதில் தற்போது இதுவரை கடந்த ஆண்டு உதவித் தொகையானது பெரும்பாலான மாணவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி உதவித் தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரிகளில் உள்ள உமிஸ் UMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் மாணவர்களுடைய வங்கி கணக்கில் இந்த வருகைத் தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளது இதில் முதற்கட்டமாக மாநில அரசின் பங்காக 40% உதவித்தொகை மாணவ மாணவிகளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டுக்கான புது விண்ணப்பம் எப்போது விண்ணப்பிக்க முடியும்?..
இந்த ஆண்டு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்ந்த புதிய மாணவர்களுக்கு புதிதாக கல்வி விண்ணப்பிக்க அரசு இணையதளத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை இருந்தாலும் மாணவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை தங்களுடைய பள்ளி சான்றிதழில் உள்ளவாறு பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொண்டு வங்கியில் உங்களுடைய வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் சீர் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதேபோல மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது கூடுதல் சான்றுகளாக பதிவேற்றம் செய்யக்கூடிய வருமான சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் மாணவர்கள் பெயர் பள்ளியில் உள்ள பெயர் ஆதார் எண்ணில் உள்ள பெயர் என அனைத்தும் ஒன்றாக உள்ளது போல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உங்களுடைய கல்லூரிகளில் UMIS இணையதளத்தில் பதிவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் 60% கல்வி உதவித் தொகையை பெற மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் OTR -One time Registration பதிவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.