தமிழக அரசு சத்துணவு துறையில் 8997 பணியிடங்கள் அறிவிப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது முழு வழிமுறை இதோ!..
TN Noon Meal Cooking Assistant 2025
TN Noon Meal Cooking Assistant 2025 : தமிழ்நாட்டில் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. காலியாக இருக்கின்ற 8997 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Whatsapp Chennal | Join |
எனவே இப்பணியை குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
பணியின் பெயர்:
சமையல் உதவியாளர்
சம்பளம்:
தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை:
சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 காலிப்பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி:
சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்பதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை ?
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில், அரசாணை (நிலை) எண்.4. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-2) துறை, நாள் 06.10.2020-ல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணி நியமனம் செய்திட வேண்டும். சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1WHC7soH8SL-TvqWDzMdr_1qDwVSseXEy/view