Whatsapp latest update 2025 Document scanner
வாட்ஸ் அப்பில் வந்தாச்சு சூப்பர் அப்டேட்!..
Whatsapp latest update 2025 Document scanner : Whatsapp ஆனது தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு விதத்திலும் புதுப்புது விதமான அப்டேட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் இனி உங்கள் போனில் தனியாக டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்வதற்கான தனியாக ஒரு ஆப் இனி தேவைப்பட போவதில்லை வாட்ஸ் அப்பில் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்வதற்கான வசதியை வாட்ஸ்அப் ஆனது ஏற்படுத்தி உள்ளது இதைப் பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.

இந்த whatsapp நிறுவனம் வாட்சப் மற்றும் facebook உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தனது வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது. அதுவும் உலக அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பல மில்லியங்களை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.Whatsapp நிறுவனமானது மெட்டா நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படுகிறது.
Whatsapp Chennal | Join |
whatsapp ஆனது மெட்டா நிறுவனத்தின் கையில் வந்ததிலிருந்து பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் இந்த வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது.
இந்த whatsapp ஆனது தனிப்பட்ட பயனாளர்க்கென பர்சனல் whatsapp மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடர்பாக பயன்படுத்த Business whatsapp என இரண்டு வகை வாட்ஸ் அப்ல பயன்பாட்டில் கொண்டுள்ள whatsapp நிறுவனமானது வாட்ஸ் அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்து ஆச்சரியம் அளித்தது.
அதேபோல வாட்ஸ் அப்பில் kb கணக்கில் அனுப்பப்பட்டுள்ள டாக்குமென்ட்கள் தற்போது ஜிபி கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அப்லோட் செய்யக்கூடிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.
Whatsapp latest update 2025 Document scanner
பெரும்பாலும் பயனர்கள் தங்களுடைய டாக்குமெண்ட்களை வாட்ஸ் அப்பில் அனுப்புவதற்கு ஸ்கேனிங் செய்வதற்கு என்று தனியாக வேறு ஒரு ஆப்பை பயன்படுத்தி வந்திருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் நீங்கள் டாக்குமெண்ட்களை அப்லோட் செய்யும் போது அந்த whatsapp Document Scan டாக்குமெண்ட்டு உங்கள் மொபைலில் உள்ளதா அல்லது ஸ்கேன் செய்ய வேண்டுமா?என்று கேட்டு, நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் அந்த டாக்குமெண்ட்களை வாட்ஸ் அப்பின் மூலமாகவே scan செய்து அதை நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு நீங்கள் அனுப்பலாம்.
தற்போது இந்த வசதியை whatsapp நிறுவனமானது ஐஓஎஸ் பயணம் அவர்களுக்கு சோதனை அடிப்படையில் அளித்துள்ளது. பிறகு இது ஆண்ட்ராய்டு இணையதளத்திலும் இயங்கும் வசதியை whatsapp நிறுவனம் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.